சீர்காழி நகராட்சியில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையேற்றார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் பாதுகாப்பு அலுவலர் உமாதேவி மற்றும் பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றை தடுக்கும் வழிகள், மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள், மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதேபோல், அன்புகரங்கள் திட்டத்தில் சேர்க்க தகுதியான குழந்தைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் கல்வி, வருவாய், சுகாதாரம், என்.ஜி.ஓ. உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர். எனினும், சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து எந்த காவலரும் பங்கேற்காதது கூட்டத்தில் சர்ச்சையாக மாறியது.
சனி, 8 நவம்பர், 2025
Home
செய்திகள்
சீர்காழியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் – மகளிர் காவல் நிலையம் பங்கேற்காதது சர்ச்சை
சீர்காழியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் – மகளிர் காவல் நிலையம் பங்கேற்காதது சர்ச்சை
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக