திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், அனைத்து கூட்டணி கட்சிகளும் இணைந்து எஸ்.ஐ.ஆர் திட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான இ.பெ. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் க.மைதீன் பாவா, மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன், நகர செயலாளர் செல்வேந்திரன், காங்கிரஸ் மாநகர் தலைவர் மணிகண்டன், திமுக மூத்த நிர்வாகிகள் அக்பர், முருகானந்தம், இல. கணேசன், கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திர குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியல் பணியை திரும்பப் பெற வேண்டும் என்றும், பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிகழ்வில் அனைத்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
செவ்வாய், 11 நவம்பர், 2025
Home
செய்திகள்
திண்டுக்கலில் எஸ்.ஐ.ஆர் திட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கலில் எஸ்.ஐ.ஆர் திட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக