சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள ஹேப்பி லேர்னிங் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் ஹாப்பி கிட்ஸ் கிண்டர் கார்டன் நர்சரி & பிரைமரி பள்ளி இணைந்து மாநில அளவிலான மாணவர் போட்டிகளை சிறப்பாக நடத்தின.
தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். ஃபோனிக்ஸ், ஓவிய போட்டி, மாறுவேடப் போட்டி, பரதநாட்டியம், வெஸ்டர்ன் டான்ஸ், திருக்குறள் வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் நோக்கம், மாணவர்களின் படைப்பாற்றல், நம்பிக்கை, மற்றும் கலைத்திறன்களை ஊக்குவிப்பதாக அமைந்தது.
நிகழ்வில் பள்ளியின் நிறுவனர் பாலாஜி, இணை நிறுவனர் அகிலா பாலாஜி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் பங்கேற்றனர். சிறுவர் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் நடைபெற்றதால், பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெருமிதம் தெரிவித்தனர்.
மாநில அளவில் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வு, கல்வியுடன் இணைந்த கலாச்சார வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்தது.
செவ்வாய், 11 நவம்பர், 2025
சென்னையில் ஹேப்பி லேர்னிங் எஜுகேஷனல் டிரஸ்ட் மாநில அளவிலான மாணவர் போட்டிகள்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக