அரசம்பட்டியில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

செவ்வாய், 11 நவம்பர், 2025

அரசம்பட்டியில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசம்பட்டியில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே. அசோக்குமார் (எம்.எல்.ஏ) தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கழக துணை பொது செயலாளர் மற்றும் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி, சேலம் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனையுரையாற்றினர்.
கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.எம். மாதையன், ஒன்றிய செயலாளர்கள் பையூர் பெ. ரவி, திருமால், முன்னாள் ஒன்றிய செயலாளர் எம்.எஸ். பிரபாகரன், விவசாய அணி செயலாளர் மோகன், ஒன்றிய பொருளாளர் ராமு, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பழனிசாமி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பழனி, இளைஞரணி செயலாளர் கணேசன், சார்பு அணி ஒன்றிய செயலாளர்கள் கண்ணப்பன், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்று தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad