கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 18-க்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் மற்றும் மாணிக்கவாசகர் நகர் பகுதிகளில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தனித்தனியாக சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தூய்மைப்பணியாளர்கள் மூலம் வீட்டுக்கு வீடு சென்று குப்பை பிரிப்பு செயல்பாடுகள் எவ்வாறு நடைமுறையில் உள்ளன என்பதைக் கவனித்து, தேவையான ஆலோசனைகள் வழங்கினார்.
ஆய்வின்போது மாநகர நல அலுவலர் மோகன், உதவி நகர்நல அலுவலர் பூபதி, உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் முருகன், உதவி பொறியாளர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் பவுன்ராஜ், மற்றும் SWMS ஒப்பந்த நிர்வாகி வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
மாநகராட்சி ஆணையாளர், குப்பை பிரிப்பு மற்றும் துப்புரவு பணிகளில் மக்களின் பங்களிப்பு மிக அவசியம் எனக் கூறி, வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் குப்பை பிரிப்பை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
செவ்வாய், 11 நவம்பர், 2025
கோயம்புத்தூரில் குப்பை பிரிப்பு பணிகளை ஆய்வு செய்த ஆணையர் சிவகுரு பிரபாகரன்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக