கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

ஞாயிறு, 9 நவம்பர், 2025

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு (122) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெள்ளலூர் சி.வி. ராமசாமி நகர் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்தப் பணியின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு தோறும் சென்று வாக்காளர்களிடமிருந்து தேவையான தகவல்களை சேகரித்து, கணக்கெடுப்பு படிவங்களை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்திட்டத்தின் முன்னேற்றத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்து, வாக்குச்சாவடி அலுவலர்களுடன் உரையாடி வழிகாட்டுதல்களை வழங்கினார். உடன் மதுக்கரை வட்டாட்சியர் திரு. வேல்முருகன், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர், ஒவ்வொரு தகுதியான வாக்காளரும் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், குடிமக்கள் தங்களின் விவரங்களை சரிபார்த்து, திருத்தம் தேவையானால் உடனடியாக விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad