கோயம்புத்தூர் மாவட்டம் தாமஸ் பார்க் ரவுண்டானா பகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 (Special Intensive Revision - 2026) தொடர்பாக விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, கல்லூரி மாணவ, மாணவியர்கள் இணைந்து நடத்திய கலை நிகழ்ச்சியை பார்வையிட்டார். வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் இளைஞர்கள் 18 வயது நிறைவடைந்ததும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பயிற்சி (ஆட்சியர்) மரு. பிரசாத் இ.ஆ.ப., அவர்கள், மகளிர் திட்ட இயக்குனர் திருமதி மதுரா, வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) திருமதி மாருதிபிரியா, தேர்தல் வட்டாட்சியர் திரு. தணிகைவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) திருமதி மகேஸ்வரி உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாணவர்களும் பொதுமக்களும் உற்சாகமாக கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி மூலம், வாக்குரிமையின் மதிப்பு மற்றும் தேர்தலில் பங்கேற்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஞாயிறு, 9 நவம்பர், 2025
Home
செய்திகள்
கோயம்புத்தூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோயம்புத்தூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 விழிப்புணர்வு நிகழ்ச்சி
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக