நேபாளத்தில் சர்வதேச தற்காப்புக் கலைப் போட்டியில் கம்பம் மாணவர்கள் 15 பதக்கங்கள் வென்று சாதனை - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

திங்கள், 10 நவம்பர், 2025

நேபாளத்தில் சர்வதேச தற்காப்புக் கலைப் போட்டியில் கம்பம் மாணவர்கள் 15 பதக்கங்கள் வென்று சாதனை

தேனி மாவட்டம் கம்பம் நகரில் செயல்பட்டு வரும் வைரம் குரூப் ஆப் தற்காப்புக் கலை பயிற்சி நிறுவனம் மாணவர்கள் சர்வதேச அளவில் பெருமை சேர்த்துள்ளனர். இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 13 மாணவர்கள் நேபாளத்தில் நடைபெற்ற இந்தோ-நேபாள தற்காப்புக் கலைப் போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். 14 வயதுக்குட்பட்ட பிரிவில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில், மாணவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றி பெற்று மொத்தம் 15 பதக்கங்களை கைப்பற்றினர். குத்துச்சண்டை போட்டியில் 4 தங்கம், 3 வெள்ளி, வில்வித்தை போட்டியில் 3 தங்கம், 3 வெள்ளி, யோகாசனத்தில் 1 தங்கம் மற்றும் சிலம்பப் போட்டியில் 1 தங்கம் என சிறப்பான சாதனை புரிந்துள்ளனர்.
இந்த வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்டமாக நடைபெறும் ஆசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பிய அவர்களை பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஊர்வாசிகள் மாலை அணிவித்து ஊர்வலமாக வரவேற்றனர். மாணவர்களின் சிறப்பான வெற்றிக்காக நிறுவனத் தலைவர் வைர ஹரிஷ் மற்றும் பயிற்சியாளர்கள் திவியம் திவ்யா ஆகியோர் பாராட்டப் பெற்றனர். அவர்கள் மாணவர்களின் திறமைகளை மேலும் மேம்படுத்தி, உலகளவில் இந்தியாவை பெருமைப்படுத்த வேண்டுமென வாழ்த்தினர். இந்த வெற்றி மாணவர்களுக்கு ஊக்கமாக இருந்து, எதிர்காலத்தில் இன்னும் பல்வேறு சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்க உதவும் என அனைவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad