காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது 🎓✨
காஞ்சிபுரம் பல்லவன் கல்வி குழுமத்தின் அங்கமான பல்லவன் பொறியியல் கல்லூரி, கடந்த 25 ஆண்டுகளாக திறமையான பொறியியல் மாணவர்களை உருவாக்கி வருகிறது. அதன் 25வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், கல்லூரி நிறுவனரும் தாளாளருமான பி.போஸ் தலைமையில் நடைபெற்றது.
விழாவில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒழுங்குமுறை பிரிவு ஆலோசகர் பேராசிரியர் மோரிராமுலு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, 7 பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற 527 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
தன் உரையில் மோரிராமுலு, “ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பல்லவன் கல்வி குழுமம் முக்கிய பங்காற்றி வருகிறது. மாணவர்கள் தொடர்ச்சியாக திறனை மேம்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும். சந்திராயன் திட்டத்தில் கிராமப்புற மாணவர்களின் பங்கு அதிகம் என்பதே இதற்குச் சிறந்த உதாரணம்” என்று தெரிவித்தார்.
விழாவில் நிர்வாக இயக்குநர் ஜெயபெருமாள் போஸ், இயக்குநர்கள் ஜானகி புருஷோத்தமன், கன்னிகா பரமேஸ்வரி போஸ், எத்திராஜ் கோவிந்தராஜ், கிருஷ்ணன், மஞ்சுளா சிவசண்முகம், கல்லூரி முதல்வர் பால்வண்ணன், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திங்கள், 10 நவம்பர், 2025
காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக