காஞ்சிபுரத்தில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஐயப்பன் பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

சனி, 8 நவம்பர், 2025

காஞ்சிபுரத்தில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஐயப்பன் பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை அருகே சர்வோதயா நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ நவ துர்க்கை அம்மன் கோவிலில், கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் தாஸ் மற்றும் பாபு ஏற்பாட்டில் ஸ்ரீ சபரிகிரி வாசன் பக்த ஜனா சபாவின் சார்பில் ஐயப்பன் பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் காஞ்சிபுரம் நகரேஸ்வரர் திருக்கோவிலின் ஸ்ரீ தர்மசாஸ்தா பஜனை சபா குருசாமி ஸ்ரீலஸ்ரீ பகவான் பாண்டுரங்க குருசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஐயப்பன் பஜனைகள் பாடி, ஐயப்பன் சிலைக்கு மலர் அலங்காரம் செய்து 18-ஆம் படி அமைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினார்.
பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பூர்வமாக வழிபட்டனர். விழா நிறைவில் பக்தர்களுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுவாக கார்த்திகை மாதம் தொடங்கிய பின்பே ஐயப்பன் பூஜைகள் நடைபெறும் நிலையில், இம்முறை மாதம் பிறக்கும்முன்பே பக்தர்கள் பூஜை ஆரம்பித்திருப்பது அந்தப் பகுதி ஐயப்ப பக்தர்களின் ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad