ஐப்பசி மாத கார்த்திகை விரதம் – முருகன் பக்தர்களுக்கான புண்ணிய நாள் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

சனி, 8 நவம்பர், 2025

ஐப்பசி மாத கார்த்திகை விரதம் – முருகன் பக்தர்களுக்கான புண்ணிய நாள்

இந்து மதத்தில் தமிழ்க் கடவுள் என போற்றப்படும் முருகப்பெருமான் மீது பக்தி செலுத்தும் பல சிறப்பு நாட்களில், ஐப்பசி மாத கார்த்திகை விரதம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவ்வாண்டு (2025) கார்த்திகை விரதம் நவம்பர் 6ஆம் தேதி, வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் இருப்பதால், கார்த்திகை நட்சத்திரத்தில் விரதமிருந்து வழிபடுவது அவரின் அருளைப் பெறும் நாளாகக் கருதப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் மாலை 5 மணிக்கு வரும்போது, அந்த நாள் விரதத்திற்குச் சிறப்பானதாகும்.
விரதம் இருப்பவர்கள் முன்தினமான நவம்பர் 5ஆம் தேதி மதியம் வரை உணவு எடுத்துக் கொண்டு, அதன் பிறகு விரதம் தொடங்க வேண்டும். நவம்பர் 6 அன்று அதிகாலை புனித நீராடி முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். உடல் நலம் காரணமாக முழு விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் ஆகியவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு விரதம் இருக்கலாம். இந்த நாளில் திருப்புகழ், கந்த கலிவெண்பா, ஸ்கந்த புராணம் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது புண்ணியத்தை தரும். மறுநாள் காலை நீராடி முருகனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும். கார்த்திகை விரத நாளில் அன்னதானம் செய்வது மிகுந்த புண்ணிய பலனை அளிக்கும் என நம்பப்படுகிறது. இவ்விரதம் இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம், கல்வி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், திருமண தடை நீங்கல் மற்றும் குழந்தைப் பாக்கியம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என முருகன் பக்தர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad