தென் இந்தியாவின் முக்கியமான மூன்று மாநிலங்களை — கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா — இணைக்கும் புதிய எர்ணாகுளம்–பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை வருகிற நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்படுகிறது.இந்த ரயில் பெங்களூருவிலிருந்து கோவை வழியாக எர்ணாகுளம் வரை இயக்கப்பட உள்ளது. பயணிகள் வசதிக்காக ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய நான்கு முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மூன்று மாநிலங்களையும் இணைக்கும் இந்த சேவைக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அட்டவணைப்படி, ரயில் தினமும் (புதன்கிழமை தவிர) காலை 5.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 1.50 மணிக்கு எர்ணாகுளத்தை அடையும். வழியில் சேலம் – 8.15 மணி, திருப்பூர் – 9.47 மணி, கோவை – 10.35 மணி என நின்று செல்லும். திரும்பும் ரயில் எர்ணாகுளத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.00 மணிக்கு பெங்களூருவை அடையும்.இரு மாநிலங்களுக்கிடையிலான பொருளாதார, தொழில், கல்வி மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்குத் துணைபுரியும் வகையில், இந்த ரயில் தென் இந்தியாவின் போக்குவரத்து துறையில் புதிய மைல்கல்லாக அமையும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
வியாழன், 6 நவம்பர், 2025
எர்ணாகுளம்–பெங்களூரு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நவம்பர் 8 அன்று தொடங்குகிறார்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக