திண்டுக்கல் திம்மணநல்லூரில் பனை விதை நடும் விழா – சமூக அமைப்புகள் இணைந்து நடத்திய சிறப்புவிழா - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வியாழன், 6 நவம்பர், 2025

திண்டுக்கல் திம்மணநல்லூரில் பனை விதை நடும் விழா – சமூக அமைப்புகள் இணைந்து நடத்திய சிறப்புவிழா

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சியில் ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை, லயன்ஸ் கிளப் திண்டுக்கல் கோல்டன் சிட்டி சார்பில்,பனை விதை நடும் விழா.திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சியில்  ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை லயன்ஸ் கிளப் திண்டுக்கல் கோல்டன் சிட்டி இணைந்து வடுகப்பட்டி காடகுள கரையில் பனைவிதை நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு லயன் சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். திம்மணநல்லூர் ஊராட்சி மன்ற செயலாளர் வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக ,அப்துல் கலாம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக லயன்ஸ் சங்க மண்டல தலைவர் பொறியாளர் குமார் கலந்து கொண்டார்.  திண்டுக்கல் மனித நேய மக்கள் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் செல்வம் பனை விதை நட்டு தொடங்கி வைத்தார்.லயன்ஸ் சங்க செயலாளர் ரமேஷ் ,பெருளாளர் கணேசன்,பட்டய உறுப்பினர் சுரேஸ்குமார், சமூக ஆர்வலர் பாலமுருகன் ,அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கருப்பம் பட்டி திருப்பதி,திண்டுக்கல் மனித நேய மக்கள் அறக்கட்டளை செயலாளர் விஜயக் குமார்  பனை விதை நன்மைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.நிறைவில்  அறக்கட்டளை தலைவர் சமூக சேவகர் டாக்டர் மருதைகலாம் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad