கமல்ஹாசன் 71வது பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்த - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வெள்ளி, 7 நவம்பர், 2025

கமல்ஹாசன் 71வது பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்த

மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் நடிகர் கமல்ஹாசன் இன்று (நவம்பர் 7) தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ு இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் (Twitter) பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: “பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும், பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்!” மேலும் அவர், “நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும், திரையுலகில் தங்களது கலைத் தொண்டும் மேலும் சிறக்கட்டும்” என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad