காஞ்சிபுரம் சமூகநலத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், அவர்களுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் திருநங்கைகள் இணைந்து கரகாட்டம், நாடகம், பாடல் ஆகியவற்றின் வழியாக பெண் குழந்தை திருமணம் தடுப்பு, இளம் வயது கர்ப்பம், மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த முக்கியமான செய்திகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
அதேவேளை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சனைகளுக்கு உதவும் இலவச தொலைபேசி எண்கள் 1098 (குழந்தைகள் உதவி எண்) மற்றும் 181 (பெண்கள் உதவி எண்) பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில், அனைவரும் பெண் குழந்தை திருமணத்தைத் தடுப்போம் என்ற உறுதிமொழி எடுத்தனர்.
மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் பல துறை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, பேருந்து நிலையத்தில் நடைபெற்றதால் பொதுமக்கள் பெருமளவில் ஈர்க்கப்பட்டனர்.
வெள்ளி, 7 நவம்பர், 2025
காஞ்சிபுரத்தில் பெண் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக