திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து வரும் நவம்பர் 10, 2025 முதல் மார்ச் 31, 2026 வரை, அதாவது 142 நாட்கள், வினாடிக்கு 100 கனஅடி அளவுக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள
மகிழடி, நம்பித்தலைவன் பட்டயம், ஏர்வாடி, ராஜாக்கள்மங்கலம், வள்ளியூர், தளபதிசமுத்திரம், அச்சம்பாடு, கள்ளிகுளம் உள்ளிட்ட பாசனப் பகுதிகளில் உள்ள 5780.91 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.
இதன் மூலம் அப்பகுதி விவசாயிகள் பயிரிடும் நெல், நிலக்கடலை உள்ளிட்ட பருவப்பயிர்களுக்கு தேவையான நீர் கிடைத்து, வேளாண் உற்பத்தி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி, 7 நவம்பர், 2025
கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு அனுமதி
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக