கும்பகோணத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்க மண்டலம்–3 மாநாடு சிறப்பாக நடைபெற்றது - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

புதன், 12 நவம்பர், 2025

கும்பகோணத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்க மண்டலம்–3 மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கும்பகோணம் கே.ஆர்.ஜி. பவளம் பேலஸ் மண்டபத்தில், பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் அங்கமான மண்டலம்–3 சார்பில் மண்டல மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆளுநர் மணிவண்ணன் தொடங்கி வைத்து உரையாற்றினார். மண்டலத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பன்னாட்டு இயக்குநர் தேர்வு சீனிவாசன், சன் டிவி “கல்யாண மாலை” புகழ் சிறப்பு பேச்சாளர் அருண் ஆகியோர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து முன்னாள் மாவட்ட ஆளுநர் சவுரி ராஜ், மாவட்ட முதல் துணை நிலை ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேல், இரண்டாம் துணை நிலை ஆளுநர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். இந்நிகழ்வில் முன்னாள் ஆளுநர்கள் வேதநாயகம், இமயவரப்பன், முகமது ரபிக், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் லட்சுமணன், சுப்பிரமணியன், ஜார்ஜ் ராய், மனோகரன், செயலாண்மைக்குழு தலைவர் மவில்வானந்தம், செயலாளர் மோகன், பொருளாளர் விஜயா ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மாநாட்டில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் பல்வேறு கிளைகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad