காஞ்சிபுரம் மாவட்டம் ராஜகுலத்தை அடுத்த அத்திவாக்கம் ஊராட்சியில், அதிமுக வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முனைவர் ரமேஷ் அவர்களின் ஏற்பாட்டில், அவரது தங்கை மகன் லக்ஷ்மணன் சரஸ்வதி அவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ததை ஒட்டி, அதிமுக சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர், அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச் செல்வன், மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு, வழக்கறிஞர் லக்ஷ்மணன் சரஸ்வதிக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் பழனி, அமைப்பு செயலாளர் பா.கணேசன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் KUS சோமசுந்தரம், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வி.ஆர். மணிவண்ணன், கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, பகுதி கழக செயலாளர் களக்காட்டூர் ராஜு, மாணவரணி செயலாளர் திலக் குமார், பகுதி கழக செயலாளர் ஜெயராஜ், புரட்சி பாரதம் கட்சி தலைவர் வழக்கறிஞர் ஜெகன் மூர்த்தி, பா.ஜ.ச. கட்சி மாநில வழக்கறிஞர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள், ஊராட்சி மக்கள், ஆதரவாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.
புதன், 12 நவம்பர், 2025
அத்திவாக்கத்தில் வழக்கறிஞர் லக்ஷ்மணன் சரஸ்வதி பாராட்டு விழா
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக