காஞ்சிபுரம் மாநகராட்சி 2வது வார்டில் சர்வதீர்த்த குளக்கரை அருகே முன்னோர்களுக்கு காரியம் செய்ய பயன்படும் மண்டபம் போதுமானதாக இல்லாத காரணத்தால், புதிய காரிய மண்டபம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 2024–25ன் கீழ் ரூ.18.00 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று புதிய காரிய மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவை எம்.எல்.ஏ. எழிலரசன் துவக்கி வைத்தார்.
மேலும், காஞ்சிபுரம் மாநகராட்சி 3வது வார்டில் உள்ள தேரடி தெருவில், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பணிகளும் எம்.எல்.ஏ. எழிலரசன் அவர்களால் அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஆணையர் பாலசுப்பிரமணியன், மாநகர பொறியாளர் கணேசன், மண்டலக் குழுத் தலைவர் சசிகலா கணேஷ், மாமன்ற உறுப்பினர்கள் விமலா தேவி, ஜோதிலட்சுமி சிவாஜி, திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதன், 12 நவம்பர், 2025
Home
செய்திகள்
காஞ்சிபுரத்தில் ரூ.31.57 இலட்சம் மதிப்பில் புதிய காரிய மண்டபம் மற்றும் அங்கன்வாடி மையம் கட்டுதல் தொடக்கம்
காஞ்சிபுரத்தில் ரூ.31.57 இலட்சம் மதிப்பில் புதிய காரிய மண்டபம் மற்றும் அங்கன்வாடி மையம் கட்டுதல் தொடக்கம்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக