தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் 9-ஆம் நாள் தேரோட்டம் இன்று (நவம்பர் 12) காலை கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழா நவம்பர் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, அம்பாள் தினமும் காலை பல்லக்கிலும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.
இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.
திரளான பக்தர்கள் பங்கேற்ற தேரோட்டத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் செ. ராஜூ, நகர் மன்ற தலைவர் கருணாநிதி, வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பி.எஸ்.ஏ. ராஜகுரு, உறுப்பினர் திருப்பதி ராஜா, தமிழ் மாநில காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்று தேரை இழுத்தனர்.
தேர் நான்கு ரதவீதிகளை சுற்றி வந்து நிலையை வந்தடைந்தது. இறுதியில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வரும் நவம்பர் 15-ஆம் தேதி திருக்கல்யாணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
புதன், 12 நவம்பர், 2025
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Tags
# ஆன்மீக தகவல்கள்
About bmstelevision
ஆன்மீக தகவல்கள்
லேபிள்கள்:
ஆன்மீக தகவல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக