திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2025 — கொடியேற்றத்துடன் பத்து நாள் உற்சவம் தொடக்கம் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

ஞாயிறு, 23 நவம்பர், 2025

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2025 — கொடியேற்றத்துடன் பத்து நாள் உற்சவம் தொடக்கம்

அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று (25.11.2025) கொடியேற்றத்துடன் பக்திப் பெருவிழாவாக தொடங்கியது. தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயர கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திர ஓசையுடன் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த புனித நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த மகோற்சவத்தின் முதல் நாளில் காலை மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விநாயகர், சந்திரசேகர் மற்றும் பஞ்சமூர்த்திகள் பூத வாகனம், நாக வாகனம், தங்க சூரிய பிரபை, கண்ணாடி ரிஷபம், வெள்ளி யானை, சிம்மம், காமதேனு, பெரிய ரிஷபம், ரதம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். திருவிழாவின் சிறப்பு நிகழ்வான மகா தீபம் டிசம்பர் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை மலைச் சிகரத்தில் ஏற்றப்பட உள்ளது. அதே நாளில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீப தரிசனமும் நடைபெறும். தீபத் திருவிழாவைத் தொடர்ந்து டிசம்பர் 4 முதல் 6 வரை சந்திரசேகர், பராசக்தி அம்மன் மற்றும் சுப்பிரமணியர் தெப்பத் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. திருவண்ணாமலை முழுவதும் தற்போது பக்தி மற்றும் ஆன்மிக சூழல் நிரம்பி வழிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad