ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டை சுற்றி பாளையத்தில் அமைந்துள்ள தென்னக காசி பைரவர் ஆலயம் அமைந்துள்ளது இந்த கோவிலின் நுழைவாசலில் 39 அடி உயரமும் 18 அடி அகலமும் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய பைரவர் சிலை அமைந்துள்ளது இந்த கோவிலில் மூலவராக உள்ள சொர்ணலிங்க பைரவருக்கு பக்தர்களை தங்கள் கைகளால் பூஜைகள் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு தேய்பிறை அஷ்டமி தினம் காலபைரவருக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது இன்று ஆனி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு இங்கு உள்ள சொர்ணலிங்க பைரவருக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் தங்கள் கைகளால் பைரவருக்கு அபிஷேகம் செய்தனர் அதைத் தொடர்ந்து பைரவ பீடத்தின் ஆன்மீக குரு ஸ்ரீ விஜய் சுவாமிகள் தலைமையில் சொர்ணலிங்க பைரவருக்கு பால் தயிர் இளநீர் சந்தனம் பஞ்சாமிர்தம் குங்குமம் தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் மூலம் சிறப்பான முறையில் அபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து பல்வேறு மிதமான மலர் மாலைகளும் தங்க ஆபரணங்களும் சூடி சிறப்பான அலங்காரத்தில் காட்சியளித்த சொர்ணலிங்க பைரவருக்கு பல்வேறு விதமான தீப ஆராதனைகள் கட்டப்பட்டன இந்த தேய்பிறை அஷ்டமியில் பூஜையை முன்னிட்டு ஈரோடு சேலம் நாமக்கல் கரூர் திருப்பூர் கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரின் அருளை பெற்று சென்றனர்
புதன், 18 ஜூன், 2025
பைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்புகள்
Tags
# ஆன்மீகம்
About bmstelevision
ஆன்மீகம்
லேபிள்கள்:
ஆன்மீகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக