ஒரு சில கிழமைகளில், ஒரு சில நட்சத்திரங்கள் சேர்ந்து வரும்போது நாம் செய்யக்கூடிய வழிபாடானது நம்முடைய கஷ்டங்களை அதிவிரைவாக சரி செய்து விடும். அந்த வகையில் பார்த்தால் இந்த வியாழக்கிழமையோடு சேர்ந்து உத்திரட்டாதி நட்சத்திரம் வந்திருக்கிறது. இன்றைய நாளில் சனி பகவானை வழிபாடு செய்தால், நம் ஜாதக கட்டத்தில் இருக்கும் சனி தோஷங்கள் விலகும். ஏழரை சனி, கண்டக சனி, பாத சனி, அஸ்தமத்து சனி என்று எந்த சனி தோஷம் உங்கள் ஜாதக கட்டத்தில் இருந்தாலும், சனிபகவானால் உங்களுடைய வாழ்க்கையில் பல கெடுதல்கள் நடக்கும் பட்சத்தில், இன்றைய தினம் சனிபகவானை பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்து பாருங்கள். நிச்சயமாக சனி தோஷம் குறையும். சனியின் ஆக்ரோஷம் குறையும். உங்களுடைய துன்பங்களின் வீரியங்களும் குறைய துவங்கும்.உங்கள் வீட்டு பக்கத்தில் நவகிரக சன்னிதானம் எங்கு இருக்கிறதோ, அந்த கோவிலுக்கு சென்று, அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்தை முதலில் வழிபாடு செய்ய வேண்டும். சிவன் கோவிலா, அம்மன் கோவிலா, பிள்ளையார் கோவிலா, எந்த கோவிலாக இருந்தாலும் அந்த தெய்வத்திடம் முதலில் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு, பிறகு நவகிரகத்திடம் செல்லுங்கள். சனி பகவானுக்கு 2 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, நீல நிற சங்குப்பூ வாங்கி கொடுத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இன்றைய பொழுது இந்த வழிபாட்டை எப்போது வேண்டுமென்றாலும் செய்யலாம். இன்று இரவு 7:00 மணியிலிருந்து 8:30 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்தால் அதி அற்புதமான பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.கூடுமானவரை இன்று யாரும் முடிவெட்டிக் கொள்ளாதீர்கள். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. நகம் வெட்டக்கூடாது. ஷேவிங் செய்யக்கூடாது. இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதிர்பாராத விதமாக இந்த விஷயங்களை எல்லாம் இன்று நான் செய்து விட்டேன் என்றால் தவறு கிடையாது. பிரபஞ்சத்திடம் நான் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு ஒன்றையும் கேட்டுக் கொள்ளுங்கள். இன்று சுப விஷயங்களை செய்யலாம், வீட்டிற்கு தேவையான ஆடை ஆபரணங்கள் பொன் பொருள் வாங்கினால் அது லாபகரமாக இருக்கும். வாங்கிய பொருட்கள் எந்த விதத்திலும் நஷ்டமடையாது. தங்கம் வெள்ளி வாங்கினால் மேலும் மேலும் தங்கம் சேரும். வாங்கிய நகைகள் அடமானத்திற்கு போகாமலும் இருக்கும்.அதேபோல இன்று மதியம் சாப்பிடுவதற்கு முன்பு, காகத்திற்கு உங்கள் வீட்டில் சமைத்த சாதத்தை வைத்து விட்டு, பிறகு உங்களுடைய மதிய உணவை எடுத்துக் கொள்ளுங்கள், நல்லதே நடக்கும். முடிந்தால் இன்றைய தினம் உங்கள் கையால் ஊனமுற்றவர்களுக்கு ஒரு சிறு உதவியை செய்யுங்கள். இன்று மதிய உணவிற்காக ஒரு தயிர் சாதம் வாங்கி ஒரு ஊனமுற்றவர்களுக்கு தானமாக கொடுத்தாலும் போதும்.
சனிபகவான் மந்திரம் ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ
வியாழன், 19 ஜூன், 2025
சனியின் கோபத்தை குறைக்கும் வழிபாடு – இன்றைய நாள் முக்கியம்!
Tags
# ஆன்மிக தகவல்கள்
About bmstelevision
ஆன்மிக தகவல்கள்
லேபிள்கள்:
ஆன்மிக தகவல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக