டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழாஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ராஜ்குமார், வெறும் 24 பந்துகளில் 58 ரன்கள் குவித்து அணிக்கு வலுவான அடித்தளமிட்டார். அவருக்கு பக்கபலமாக வாசீம் அகமது 32 ரன்களும், சஞ்சய் யாதவ் 27 ரன்களும் எடுத்தனர். கோவை தரப்பில் ஜாதவேத் சுப்ரமணியன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை கிங்ஸ் அணிக்கு, ஆண்ட்ரே சித்தார்த் (39 ரன்கள்) மற்றும் சச்சின் பி (38 ரன்கள்) ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். எனினும், திருச்சி அணியின் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு கோவை வீரர்களை கட்டுப்படுத்தினர். குறிப்பாக, திருச்சி அணியின் வி.அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட்டுகளையும், ஆட்ட நாயகன் ராஜ்குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கோவை அணியின் சரிவுக்கு காரணமாக அமைந்தனர்.
கடைசி கட்டத்தில் கோவை கிங்ஸ் அணியின் ரன் விகிதம் குறைய, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. கோவை அணி சந்தித்த நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஆட்ட நாயகன் ராஜ்குமார் பேட்டிங்கில் 58 ரன்களும், பந்துவீச்சில் 2/32 என சிறப்பாக செயல்பட்ட ராஜ்குமார், தனது அபார ஆல்ரவுண்டர் திறமையால் திருச்சி அணிக்கு வெற்றியை தேடித் தந்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
"இந்த சீசனில் எங்கள் ஆரம்பம் சிறப்பாக இல்லை, ஆனால் இன்று நாங்கள் பவர்பிளேயில் விக்கெட்டுகளை இழக்கவில்லை.
அதுவே வெற்றிக்கு காரணமாக அமைந்தது" என்று ஸ்ரீராம் கேபிட்டல் ஆட்ட நாயகன் விருது வென்ற ராஜ்குமார் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக