திருச்சி மாநகரில் தேசத்தை காக்கும் இந்திய ராணுவத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, அதை சிறப்பாக நடத்த ஒத்துழைத்த மாநகர மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா தியாகி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது.
இவ்விழா மாநகர மாவட்ட தலைவர் மற்றும் கவுன்சிலர் திரு எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திரு கிறிஸ்டோபர், முன்னாள் ராணுவ அணி மாநில தலைவர் திரு ராஜசேகரன், மாநகர பொருளாளர் திரு முரளி, திரு மன்சூர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பாராட்டு உரை நிகழ்த்தினர்.
நிகழ்வில் திருச்சி மாநகரின் அனைத்து கோட்ட தலைவர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். குறிப்பிடத்தக்கவர்களாக:
கோட்டத் தலைவர்கள்: மலைக்கோட்டை காந்தி, ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், உறையூர் பாக்கியராஜ், ஏர்போர்ட் கனகராஜ், பஞ்சப்பூர் மணிவேல், தில்லைநகர் கிருஷ்ணா, புத்தூர் மலர் வெங்கடேஷ், சுப்ரமணியபுரம் எட்வின்.
அணி தலைவர்கள்: மகிளா காங்கிரஸ் – ஷீலா செலஸ், அஞ்சு; NGO – திருக்கண்ணண்; ஆராய்ச்சி பிரிவு – பாண்டியன்; எஸ்சி பிரிவு – கலியபெருமாள்; சிறுபான்மை பிரிவு – பஜார் மொய்தீன்; மாணவர் காங்கிரஸ் – நரேன்; விவசாய பிரிவு – அண்ணாதுரை; அமைப்புசாரா – மகேந்திரன்; ஐடி பிரிவு – லோகேஸ்வரன்; இளைஞர் காங்கிரஸ் – ஜிம் விக்கி; கலை பிரிவு – அருள்; இந்திரா தோழி – மாரீஸ்வரி, அன்பு ஆறுமுகம்.
வார்டு தலைவர்கள்: MRJ ஆரிப், பூபாலன், பெரியசாமி, ரமேஷ், செபஸ்தியார், மூர்த்தி, சையது பாய், செல்வராசு, பெல்ட் சரவணன், முஸ்தபா, விமல், மாரியம்மாள்.
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதுடன், நிகழ்வு நிறைவில் மதிய விருந்து வழங்கப்பட்டது.
---
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக