புதுச்சேரி கடந்த மார்ச் மாதம் ஜிப்மரில் பணியாற்றும் சஜித் என்பவர் இணைய வழியில் வந்த பங்குச்சந்தையில் 30 லட்ச ரூபாய் முதலீடு செய்து பணத்தை இணைய வழி மோசடிக்காரர்களிடம் இழந்தார் இது சம்பந்தமாக இணைய வழி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் விசாரணை செய்யப்பட்டு மேற்படி வழக்கில் இழந்த பணத்தில் 18 லட்ச ரூபாயை இணைவழி போலீசார் மீட்டு அவருடைய வங்கி கணக்கிற்கு மாற்றினர். போலி பங்கு மோசடியில் சிக்கி இழந்த பணத்தில் 18 லட்ச ரூபாய் பணத்தை மீட்டுக் கொடுத்ததற்காக நேற்று சஜித் மற்றும் அவருடைய குடும்பத்தார் இணைய வழி காவல் நிலையத்திற்கு வந்து காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆய்வாளர்கள் தியாகராஜன் கீர்த்தி உதவி ஆய்வாளர் சந்தோஷ் மற்றும் காவலர் ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி தெரிவித்து சால்வை அணிவித்து சென்றனர்.
புதன், 28 மே, 2025
Home
செய்திகள்
புதுச்சேரியில் இணையவழி காவல் துறையினருக்கு பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் நன்றி தெரிவித்தார்
புதுச்சேரியில் இணையவழி காவல் துறையினருக்கு பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் நன்றி தெரிவித்தார்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக