வளர்பிறை சதுர்த்தி விநாயகர் வழிபாடு நாளை 30-5-2025 வளர்பிறை சதுர்த்தி திதி, வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பது அதி சிறப்பு. மகாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை நாளில்விநாயகரைகும்பிட்டால், வீட்டிற்குள் மகாலட்சுமி வருவதற்கு உண்டான தடைகள் விலகும். நாளைய தினம் வீட்டில் வெற்றிலையின் மேலே ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வையுங்கள். வெள்ளிக்கிழமை என்பதால் பூஜை அறை பூக்கள் போட்டு அலங்காரத்தோடு தான் இருக்கும்.பிடித்து வைத்திருக்கும் மஞ்சள் பிள்ளையார் தலையில் ஒரு அருகம்புல் சொருகி விடுங்கள்.உங்கள் உள்ளங்கைகளில் ஒரு ரூபாய் நாணயம், அதன் மேலே ஒரு அருகம் புல்லை வைத்து, கைகளை மூடி கொள்ளுங்கள். “ஓம் சக்தி கணபதியே போற்றி போற்றி” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி, உங்களுடைய பிரார்த்தனையை விநாயகப் பெருமானிடம் வையுங்கள். அதாவது உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்ன இருக்கிறது. உங்கள் வீட்டிற்குள் எந்த மகாலட்சுமி வருகை தர வேண்டும். கடன் வசூலாக வேண்டுமா, அடமானத்தில் வைத்த நகை மீட்க வேண்டுமா, அடமானத்தில் இருக்கும் சொத்து பத்திரங்கள் வீட்டுக்குள் வர வேண்டுமா, என்ன வரவு உங்களுக்கு தேவையோ, அதை விநாயகப் பெருமானிடம் கேளுங்கள். பிறகு உள்ளங்கைகளில் இருக்கும் அந்த ஒரு ரூபாயையும், அருகம்புள்ளையும், மஞ்சள் பிள்ளையார் பக்கத்தில் வைத்து, கற்பூர ஆரத்தி காண்பித்து, வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
புதன், 28 மே, 2025
வளர்பிறையில் விநாயகர் வழிபாடு
Tags
# ஆன்மிக தகவல்கள்
About bmstelevision
ஆன்மிக தகவல்கள்
லேபிள்கள்:
ஆன்மிக தகவல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக