பரமத்தி வேலூர் எல்லையம்மன் ஆலயத்தில்மகா சனி பிரதோஷ விழா - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

சனி, 24 மே, 2025

பரமத்தி வேலூர் எல்லையம்மன் ஆலயத்தில்மகா சனி பிரதோஷ விழா

நாமக்கல் மாவட்டம் - பரமத்திவேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரருக்கு 24.5.25 சித்திரை மாத தேய்பிறை சனி மகா பிரதோஷத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவின் நிகழ்வாக பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கனி வர்க்கங்கள், திருமஞ்சனம், மஞ்சள், இளநீர், கரும்பு சாறு, எலுமிச்சை சாறு, சொர்ண அபிஷேகம், சந்தனம், பன்னீர் போன்ற பல வாசனை திரவியங்கள் ஆன 21 திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பெரிய ஊதுபத்தி ஏற்றப்பட்டு கைலாய வாத்தியங்கள் முழங்க மூலவர் ஏகாம்பரநாவதற்கு விடம் உண்ட கண்டன் சிறப்பு அலங்காரம் செய்து உதிரிப் பூக்களினால் அர்ச்சனைகள் செய்து விசிறி, சாமரம், வேல், கண்ணாடி போன்ற சோடஷ உபசாரத்துடன் அடுகாரத்தி, பஞ்சாரத்தி, ஏகாரத்தி, கும்பாரத்தி, கலச ஆரத்தி உடன் மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad