இதில் கலந்து கொள்ளும் ஆண்கள் அம்மனுக்காக விரதம் இருந்து உடலில் கத்தி போடும் நிகழ்ச்சியினை தேவாங்கர் சமூகத்தினர் வெகு விமர்சையாக நடத்துவார்கள்.
அதன்படி நேற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
இதையொட்டி அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தேவாங்கர் சேடர் குளக்கரையில் புனித நீர் எடுத்துக்கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.
கத்தி பட்ட இடங்களில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. ரத்தம் சொட்ட சொட்ட ஊர்வலமாக கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டனர்.
இவ்வாறு வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக கருதப்படுகிறது. இவ்விழாவில் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேவாங்கர் சமூகத்தினர்
மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக