ஈரோடு மாவட்டம் பவானி காவேரி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் திருக்கோவில் உள்ளது திருக்கோவிலில் சிவன் எதிரே அமைந்துள்ள நந்தி பகவானுக்கு சனி பிரதோஷத்தை முன்னிட்டு பால் தயிர் இளநீர் சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் மூலம் சிறப்பான முறையில் அபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து பல்வேறு விதமான மலர் மாலைகளும் சூடி சிறப்பான அலங்காரத்தில் காட்சியளித்த அருள்மிகு நந்தி பகவானுக்கு எதிரே விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் உற்சவர்கள் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பல்வேறு விதமான மலர் மாலைகள் சுடி சிறப்பான அலங்காரத்தில் காட்சியளித்தனர் அதைத் தொடர்ந்து உதிரி பூக்களால் அர்ச்சனைகள் செய்து கோபுர தீப ஆரத்தி கும்ப தீப ஆரத்தி நட்சத்திர தீப ஆரத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான தீப ஆராதனைகளும் 16 வகையான சோரச உபச்சாரங்களும் நடைபெற்றன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானின் அருளை பெற்று சென்றனர்
சனி, 24 மே, 2025
Home
ஆன்மிகம்
பவானி காவேரி வீதியில் அருள்மிகு விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் திருக்கோவில் சனிப்பிரதோஷம் சிறப்பு அபிஷேக ஆராதனை
பவானி காவேரி வீதியில் அருள்மிகு விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் திருக்கோவில் சனிப்பிரதோஷம் சிறப்பு அபிஷேக ஆராதனை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக