வாணதிராஜபுரம் பாவாடைராயன்.அங்காள பரமேஸ்வரி சர்வசக்தி மகா மாரியம்மன் ஆலய பால்குடத் திருவிழா மானவ மாணவிகளின் சிலம்பாட்டத்துடன் வீதியுலா நடைபெற்றது - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

சனி, 24 மே, 2025

வாணதிராஜபுரம் பாவாடைராயன்.அங்காள பரமேஸ்வரி சர்வசக்தி மகா மாரியம்மன் ஆலய பால்குடத் திருவிழா மானவ மாணவிகளின் சிலம்பாட்டத்துடன் வீதியுலா நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் தாலுக்கா வாணதிராஜபுரம் காந்தி நகரில் அமைந்துள்ளது.கிராம தெய்வமான பாவாடைராயன்,அங்காள பரமேஸ்வரி,ஸ்ரீ சர்வ சக்தி மகா மாரியம்மன் ஆலயம் இந்த ஆலய வைகாசி திருவிழாவை முன்னிட்டு, காப்பு கட்டி, விரதமிருந்த நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பம்பை உடுக்கை, முழங்க பால்குடம் எடுத்து வீதியுலா வந்தனர்.
வீதியுலாவின் போது குத்தாலம் தண்டர் கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் கரீம்கான் தலைமையில் மாணவ மாணவிகளின் சிலம்பாட்டம்
நடைபெற்றது காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.பின்னர் பால்குடம் கோயிலை அடைந்து பாவாடைராயன், அங்காள பரமேஸ்வரி மற்றும் ஸ்ரீ சர்வ சக்தி மகா மாரியம்மனுக்கு பால் அபிசேகம் நடைபெற்று சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது.இந்த பால்குட திருவிழாவை குலதெய்வகாரர்கள் மற்றும் 500 க்கு மேற்பட்ட கிராமவாசிகள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad