மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்ட நாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். முக்கிய நிகழ்வான ஸ்ரீ முத்துசட்ட நாதர் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக முத்து சட்டநாதர் யதாஸ்த்தானத்தில் இருந்து வசந்த மண்டபம் எழுந்தருளினார். அங்கு முத்து சட்டநாதருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இரவு முத்து சட்டநாதர் வசந்த மண்டபத்திலிருந்து மீண்டும் எதாஸ்தானம் திரும்பும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் முன்னிலையில் கைலாய வாத்தியம் முழங்க நள்ளிரவு வரை வழிபாடு நடந்தது. முத்து சட்ட நாதர்வெள்ளி மஞ்சத்தில் யதாஸ்த்தானம் எழுந்தருளி புஷ்பாஞ்சலி தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நள்ளிரவு வரை கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சனி, 24 மே, 2025
Home
ஆன்மிகம்
சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் 69 - ஆம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம். வெள்ளி மஞ்சத்தில் முத்து சட்டநாதர் யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்வு. தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நள்ளிரவு வரை நடைபெற்றது.
சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் 69 - ஆம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம். வெள்ளி மஞ்சத்தில் முத்து சட்டநாதர் யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்வு. தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நள்ளிரவு வரை நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக