தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த போசி நாயக்கனஅள்ளி அருள்மிகு ஸ்ரீ ஏரிக்கரை முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை கோவில் முகர்த்தக்கால் மற்றும் வானவேடிக்கையுடன் முளைபாரி ஊர்வலம் கங்கணம் கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது
சிவாச்சாரிகளால் யாக ஹோமம் வளர்த்து தீபாராதனை . இரண்டாம் கால ஹோம பூஜை யும், இன்று காலை முதலே தொடங்கின மேலும் பல்வேறு புனித நதியில் இருந்து கொண்டு வந்த புனித தீர்த்தம் உப தெய்வங்களுக்கும் , ஸ்ரீ ஏரிக்கரை சுவாமி முனீஸ்வரன் சிலையின் மீது ஊற்றி மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
முனியப்ப சுவாமிக்கு அலங்காரம் செய்து கண் திறப்பு நிகழ்வு மற்றும் தீபாதனை பூஜைகள் செய்யப்பட்டது
கடத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
விழா ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்திருந்தனர் இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மெகா அன்னதானம் வழங்கப்பட்டது
சனி, 24 மே, 2025
Home
ஆன்மிகம்
கடத்தூர் அருகே போசிநாயக்கனஅள்ளி ஸ்ரீ ஏரிக்கரை முனீஸ்வரன் சுவாமி கோவில் விழா நடைபெற்றது
கடத்தூர் அருகே போசிநாயக்கனஅள்ளி ஸ்ரீ ஏரிக்கரை முனீஸ்வரன் சுவாமி கோவில் விழா நடைபெற்றது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக