புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலை அடிகள் சாலை அன்னை இந்திரா நினைவு நகர்( திடீர் நகர்) பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் மேற்கொள்ளப்பட முடியாத நிலையிலும் மேலும் அங்கு மக்கள் வசிக்க ஏதுவான சூழ்நிலை இல்லை என்பதாலும் அங்கு வசிக்கும் ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வழங்க மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் அவர்களை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான
நேரு(எ)குப்புசாமி MLA வலியுறுத்தி உள்ளார். மேலும் புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் லாம்பட் சரவணன் நகரில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் திடீர் நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.மேலும் முதல்வர் திடீர் நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து வீடு வழங்க குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் நிகழ்வின் போது
துறை அமைச்சர்
திருமுருகன் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக