புதுச்சேரி பாண்டி-கடலூர் செல்லும் சாலையில் 24, மணி நேரமும் இருசக்கர வாகன முதல் கனரா வாகனம் வரை செல்கின்றது இதில் தினந்தோறும் விபத்துக்கள் நடந்து கொண்டு இருக்கின்றது இதனை சரியாக கண்காணிப்பதற்காக இன்று காலை மொத்தம் ஏழு கேமராக்கள் பொருத்தப்பட்டது இது அபிஷேகப்பாக்கம் மற்றும் கடலூர் பகுதி நல்லவாடு பாண்டி என்று நான்கு புறமும் ஏழு கேமராக்கள் பொருத்தப்பட்டன பணிகள் நிறைவு பெற்று அதனை தொடங்கி வைக்கும் நிகழ்வு தவளக்குப்பம் சந்திப்பில் நடைபெற்றது. இதில் தெற்கு பகுதி போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் மோகன்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தவளக்குப்பத்தில் இயங்கி வரும் அரவிந்த் கண் மருத்துவமனைதலைமை மருத்துவர் வெங்கடேசன் மற்றும் ஊழியர்கள் மேலும் தவளக்குப்பம் வியாபாரி சங்கத்தினர், தெற்கு பகுதிபோக்குவரத்து ஆய்வாளர் தன்வந்திரி, உதவி ஆய்வாளர்கள்
சப் பாஸ்கர் இருதயநாதன் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து மோகன்குமார் கூறுகையில் "
இரவு நேரங்களில் இந்த பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக வந்து செல்கின்றது. இதன் காரணமாக எதிர்பாராத விதமாக ஒரு சில வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.அது போன்ற நேரங்களில் விபத்தில் சிக்கும் வாகனங்களை அடையாளம் காண்பதில் மிகவும் சிரமமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தனியார் கண் மருத்துவமனை பங்களிப்போடு இந்த 7, அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை தவளக்குப்பம் சந்திப்பில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள எதுவாக இருக்கும்,என தெரிவித்தார். மேலும் அரியாங்குப்பம் நோணாங்குப்பம் பூரணங்குப்பம் போன்ற பகுதிகளில் விபத்துக்கள் அதிகமாக நடைபெற்று உயிர் சேதம் ஏற்படுகிறது இதனை சரி செய்வதற்கு அப்பகுதி உள்ள ஹோட்டல் பெரிய நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பொதுமக்களின் சார்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக