கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் தலமாகும். சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரும் மாலை அணிந்து, 41 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி சுமந்தே சபரிமலைக் கடின நடைபாதைகளை கடந்தே சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
சபரிமலைக்கான முக்கிய சீசன் காலம் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்கள். இது ஏன் என்று பலருக்கும் தெரியாமல் இருக்கும். இதன் காரணம் கோயில் கட்டமைப்பின் நுண்ணிய வானியல் ரகசியத்தில் உள்ளது.சூரிய ஒளி – கோவில் அமைப்பு தொடர்புதென்னிந்தியாவின் பல கோயில்கள், குறிப்பிட்ட நாட்களில் கர்ப்பகிரகவிலுள்ள தெய்வத்தின் மீது நேரடி சூரிய ஒளி படும் வகையில் வானியல் கணக்குகளுக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளன.உதாரணமாக சென்னையின் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் பங்குனி மாதத்தில் சூரிய ஒளி நேரடியாக அம்பாள் மீது விழும்.
சில கோயில்களில் மாசி, சிலவற்றில் சித்திரை மாதங்களில் இந்நிகழ்வு நடைபெறும்.பொதுவாக ஆண்டில் 5–10 நாட்கள் மட்டுமே சூரியஒளி கர்ப்பகிரகத்துக்குள் புகும். அந்த நாட்களில் தெய்வத்தின் பலம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.சபரிமலையின் தனிச்சிறப்புஆனால் சபரிமலை மட்டுமே இதற்கு விதிவிலக்கு.வருடம் முழுவதும் சூரிய ஒளி கர்ப்பகிரகத்தின் மீது படும்.
இதனால் பெரும்பாலான நாட்களில் கோவில் நடை மூடப்பட்டிருக்கும் — ஏனெனில் இந்த அதிகப்படியான சூரியசக்தி காலத்தில் திறந்திருப்பது ஏற்றதல்ல என மத நம்பிக்கை கூறுகிறது.
சீசன் ஏன் கார்த்திகை–மார்கழி?கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில்:சூரியனின் சக்தி குறைந்திருக்கும்மழை, பனிக்காலம் காரணமாக சூரியன் தாமதமாக உதிப்பார்
கர்ப்பகிரகத்திற்கு நேரடி ஒளி மிதமாக இருக்கும்இதனால் இந்த மாதங்களில் கோவில் நடை நீண்ட நாட்கள் திறந்திருக்கும்.நடை திறப்பு – அடைப்பு காலங்கள் கார்த்திகை 1 → நடை திறப்பு
சுமார் 45 நாட்கள் பக்தர்கள் தரிசனம்மண்டல பூஜை முடிந்ததுடன் நடை அடைப்புபின்னர் மகரவிளக்குக்காக 4 நாட்களில் மீண்டும் நடை திறப்புஜனவரி 20 அல்லது 21 → நடை முழுமையாக அடைப்பு
மற்ற மாதங்களில் → மாதப்பிறப்பு முதல் 5 நாட்கள் மட்டுமே திறப்புஇதனால் தான் சபரிமலை சீசன் கார்த்திகை–மார்கழி மாதங்களில் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.
திங்கள், 1 டிசம்பர், 2025
சபரிமலை ஏன் கார்த்திகை–மார்கழியில் சீசன்? காரணம் இதோ!
Tags
# ஆன்மிக தகவல்கள்
About bmstelevision
ஆன்மிக தகவல்கள்
லேபிள்கள்:
ஆன்மிக தகவல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக