திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை மகாதீப விழாவை முன்னிட்டு, கிரிவலம் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாகவும் சீரான முறையிலும் பயணம் மேற்கொள்ள திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 2 முதல் 5 வரை பக்தர்களின் நெரிசலை கருத்தில் கொண்டு 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 130 கார் நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் இருப்பிடங்களைப் பெற பக்தர்கள் காவல்துறை WhatsApp உதவி எண் 9487851015-க்கு “Hello” என தகவல் அனுப்பலாம்.
கிரிவலப்பாதையில் பக்தர்களை ஏமாற்றி பணம் வசூலிப்பது குற்றமாகக் கருதப்படும் எனவும், இதைத் தடுக்கும் வகையில் அதிவிரைவு ரோந்து படைகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் எங்கு வேண்டுமானாலும் கற்பூரம் ஏற்றுவது, அனுமதியின்றி அன்னதானம் வழங்குவது, கால்நடைகளை உலாவ விடுதல் ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தர்கள் வழங்கப்படும் அன்னதான தட்டுகளை ரோட்டில் கொட்டாமல், குப்பைத்தொட்டிகளில் போட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள், முதியவர்கள் காணாமல் போனால் உடனடியாக கிரிவலப்பாதை காவல் உதவி மையங்களை அணுகலாம். உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெறலாம். சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது பொருட்கள் இருந்தால் அருகிலிருக்கும் காவலர்கள் கவனத்திற்கு கொண்டு வருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கிரிவலப்பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாகும் இடங்களில் நீண்ட நேரம் நின்று தரிசனம் செய்ய வேண்டாம் என்றும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பக்தர்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் கிரிவலம் செய்ய முடியும் என்பதையும் காவல்துறை அறிவித்துள்ளது.
திங்கள், 1 டிசம்பர், 2025
Home
ஆன்மிக தகவல்கள்
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம்: கிரிவலப்பாதைக்கு காவல்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம்: கிரிவலப்பாதைக்கு காவல்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
Tags
# ஆன்மிக தகவல்கள்
About bmstelevision
ஆன்மிக தகவல்கள்
லேபிள்கள்:
ஆன்மிக தகவல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக