திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா உற்சாகமாக நடைபெறுகிறது – தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

ஞாயிறு, 30 நவம்பர், 2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா உற்சாகமாக நடைபெறுகிறது – தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டு தவறாமல் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா இந்தாண்டும் நேர்த்தியுடன் துவங்கி, பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா தொடங்கியதையடுத்து தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதியுலா நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற தேரோட்டம் கோயில் வளாகம் மற்றும் நகரம் முழுவதும் ஆன்மிகத் சூழலை உருவாக்கியது. அருணாசலேஸ்வரர் மற்றும் அபிதகுசம்பிகை அம்மன் பஞ்சமூர்த்திகளுடன் வீதி வெளியில் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் திருவண்ணாமலை நகரம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.
கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து விரிவான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறது. பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றுப்பாதைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. வரவிருக்கும் மகா தீப நிகழ்ச்சியை முன்னிட்டு கோவிலின் உள்பகுதி முதல் மலையடிவாரப் பகுதிவரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீபம் ஏற்றப்படும் நாளில் அதிகமான பக்தர்கள் வருகை தரும் நிலையில் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஆன்மிகத் திருவிழா சூழல் நிலவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad