கீழப்பட்டி அங்காளம்மன் ஸ்ரீ ஒச்சாண்டம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவு - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

ஞாயிறு, 30 நவம்பர், 2025

கீழப்பட்டி அங்காளம்மன் ஸ்ரீ ஒச்சாண்டம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவு

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தின் கீழப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் ஸ்ரீ ஒச்சாண்டம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா மிகுந்த பக்தி பாரவசத்துடன் நடைபெற்றது. விழா நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை அதிகாலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. ஸ்ரீ நிவாச நரசிம்ம சர்மா தலைமையிலான சிவாச்சாரியார்கள் முதலாம் கால யாகசாலை பூஜையை நடத்தினர். தொடர்ந்து சனிக்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் முறையாக நடைபெற்றன.
நேற்று காலை மங்கள இசை மற்றும் விக்னேஸ்வர பூஜையுடன் நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்றது. பின்னர் கடம் புறப்பாடாகி திருக்கோவிலைச் சுற்றி வலம் வந்தது. அதன் பின்னர் கும்பத்தின் மீது புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் வானில் கருடன் வட்டமிட்டது பக்தர்களின் ஆச்சரியத்தையும் ஆன்மிக உற்சாகத்தையும் அதிகரித்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட தீர்த்தக் குடம் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்வாக்கைப் பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad