குமரியில் மீண்டும் மழை—பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வெள்ளி, 7 நவம்பர், 2025

குமரியில் மீண்டும் மழை—பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஏழு நாட்களாக பெய்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அணைகளில் இருந்து பாசனத்திற்காக சானல்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் சாகுபடிப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சுசீந்திரம், தேரூர், பூதப்பாண்டி உள்ளிட்ட பகுதிகளில் கும்பபூ சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேசமயம், வானிலை மையம் இன்று மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்தது. அதன் விளைவாக, காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டு, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், இரணியல், குலசேகரம் உள்ளிட்ட பல இடங்களில் இடைவிடாது மழை பெய்தது.
பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகள் பகுதியில் தொடர்ந்து மழை நீடிக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது. இன்றைய நிலவரப்படி, பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42.96 அடி, பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.30 அடி என பதிவு செய்யப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு 307 கன அடி நீரும், பேச்சிப்பாறை அணைக்கு 116 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கின்றன. பெருஞ்சாணி அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad