பாஜக கூட்டுறவு பிரிவை முதன்மை பிரிவாக உயர்த்த உறுதி - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

செவ்வாய், 11 நவம்பர், 2025

பாஜக கூட்டுறவு பிரிவை முதன்மை பிரிவாக உயர்த்த உறுதி

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், பாஜக கூட்டுறவு பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் இந்தியன் துரைவேல் வரவேற்புரை ஆற்றினார். மாநில இணை அமைப்பாளர்கள் லட்சுமி நாராயணன், சிவ செந்தமிழ் அரசு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் கே. ரமேஷ் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் கவிதா வெங்கடேசன் பங்கேற்றனர். பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில இணை அமைப்பாளர் டி. எஸ். ஷங்கர், கூட்டுறவு பிரிவின் வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் சட்ட உதவி நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார்.
கூட்டத்தின் முடிவில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் — கூட்டுறவு பிரிவை மாநிலத்தில் முதன்மை பிரிவாக உயர்த்துவது, மாவட்ட அளவில் அலுவலகங்களை தொடங்குவது, மத்திய கூட்டுறவு திட்டங்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்துவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் 150 பொறுப்பாளர்களை நியமிப்பது உள்ளிட்டவை அடங்கும். மேலும், ரேஷன் கடைகளில் கரி கல்யாணத் திட்டத்தின் கீழ் பிரதமர் புகைப்படத்துடன் அறிவிப்பு பலகை அமைப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது. கூட்டம், பாஜக கூட்டுறவு பிரிவை மாநில அளவில் வலுவான அமைப்பாக மாற்றும் உறுதியுடன் நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad