திருவண்ணாமலை: வீரத்தியாகி விஸ்வநாதாஸ் தொழிலாளர்கள் கட்சியின் மாநில மாநாடு - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

செவ்வாய், 11 நவம்பர், 2025

திருவண்ணாமலை: வீரத்தியாகி விஸ்வநாதாஸ் தொழிலாளர்கள் கட்சியின் மாநில மாநாடு

திருவண்ணாமலை மாநகராட்சியில் வீரத்தியாகி விஸ்வநாதாஸ் தொழிலாளர்கள் கட்சியின் பொது குழு மற்றும் செயற்குழு மாநில மாநாடு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், “தமிழகத்தில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் சமமான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மேலும், முடி திருத்தும் தொழிலாளர்களுக்காக நிறுவப்பட்ட நல வாரியம் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தொழிலாளர்கள் பெரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார். மேலும், “வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தால், பிற சமூகநீதிக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம்; இல்லையெனில் தனி வழியில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்,” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad