கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஐப்பசி பௌர்ணமி மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி விழா சிறப்பாக நடைபெற்றது - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வியாழன், 6 நவம்பர், 2025

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஐப்பசி பௌர்ணமி மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி விழா சிறப்பாக நடைபெற்றது

ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, கன்னியாகுமரி சமுத்திர ஆரத்தி அறக்கட்டளை சார்பில் முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி விழா மிகுந்த ஆன்மிகச் சிறப்புடன் நடைபெற்றது. நேற்று மாலை 6.30 மணிக்கு மேளதாளம் முழங்க தேவாரப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. கன்னியாகுமரி வேதபாடசாலையில் இருந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி, பரசுராமர் ஸ்தாபித்த பரசுராம விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தார்.
அங்கு பூஜை, சப்த கன்னிகள் பூஜை, மற்றும் கடல் மாதா சங்கல்ப அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர், சுமங்கலிப் பெண்கள் அகல் விளக்கேற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினர். பௌர்ணமி நிலவு வானத்தில் தோன்றியதும், ஐந்து சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் 5 அடுக்கு தீபங்களுடன் பவுர்ணமி நிலவை நோக்கி ஆரத்தி காட்டி ஆராதனை செய்தனர். நிகழ்ச்சிக்கு சாமிதோப்பு குரு சிவச்சந்திரன் அடிகளார் தலைமை தாங்கினார். பல ஆன்மிக மடாதிபதிகள் மற்றும் சுவாமிகள் தீபம் ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி சமுத்திர ஆரத்தி அறக்கட்டளை சிறப்பாக செய்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad