திருவண்ணாமலைவில் துணைத் தேர்தல் ஆணையர் பாணு பிரகாஷ் தலைமையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான மண்டல கலந்தாய்வுக் கூட்டம் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

சனி, 8 நவம்பர், 2025

திருவண்ணாமலைவில் துணைத் தேர்தல் ஆணையர் பாணு பிரகாஷ் தலைமையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான மண்டல கலந்தாய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை, இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பாணு பிரகாஷ் எத்துரு தலைமையில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) 2026 தொடர்பான மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தலைமை தேர்தல் அதிகாரி / அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் மற்றும் இந்திய தேர்தல் ஆணைய இயக்குநர் கே.கே. திவாரி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.பி. ஆதித்யா செந்தில் குமார், தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ. சதீஷ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ் குமார், விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். பிரசாந்த், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் க. சிவசௌந்தரவல்லசெய்யார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், சார் ஆட்சியர் எல். அம்பிகா ஜெயின், வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் (திருவண்ணாமலை), சிவா (ஆரணி), தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) தியாகராஜன் மற்றும் பல துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பாணு பிரகாஷ் எத்துரு, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகளின் முன்னேற்ற விவரங்களை ஆய்வு செய்து, தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad