திண்டுக்கல்லில் இந்திய ஹாக்கி நூற்றாண்டை முன்னிட்டு போட்டி மற்றும் பரிசளிப்பு விழா - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

சனி, 8 நவம்பர், 2025

திண்டுக்கல்லில் இந்திய ஹாக்கி நூற்றாண்டை முன்னிட்டு போட்டி மற்றும் பரிசளிப்பு விழா

இந்திய ஹாக்கி விளையாட்டின் நூறாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்தியா முழுவதும் ஒரே நாளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 1000க்கும் மேற்பட்ட ஹாக்கி போட்டிகள் நடத்தி உலக சாதனை படைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் (07.11.2025) ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் நாட்டாமை காஜா மைதீன், திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் விஷால் அர்ஜுன், உபதலைவர்கள் ரமேஷ் படேல், திபூர்சியஸ், சுவாமிநாதன், டாக்டர். அமிர்த கடேஸ்வர், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, பொருளாளர் விக்டர் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகளை பள்ளியின் தாளாளர் ஸ்டீபன் லூர்து பிரகாசம் எஸ்.ஜே. துவக்கி வைத்தார். போட்டி முடிவில் கெயின் அப் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் இந்திரா துவாரகா நாத் நினைவு பரிசுகளை வழங்கினார்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தின் தேசிய ஹாக்கி வீரர்கள் ஜோன் கிங்ஸ்டன், டாக்டர் நெபுல் ராஜ், லியோ லாரன்ஸ், விஜயகுமார், தீபகணேசன் மற்றும் வீராங்கனைகள் ஜோதிமணி, குமாரி, பேபி, லக்க்ஷா, நிஷாந்தினி ஆகியோரை பாராட்டி, கால்பந்து சங்க செயலாளர் அரசன் சண்முகம் பரிசுகளை வழங்கினார். மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் ஜோன் கிங்ஸ்டன் தெரிவித்ததாவது: வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெறவுள்ள ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், வரும் நவம்பர் 16ம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணி வரை திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் “உலக கோப்பை பவனி” நடத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் திரளாகக் கலந்து சிறப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad