தேனி மாவட்டத்தில் எரிவாயு தகன மேடை அமைப்புக்கு எதிர்ப்பு — 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

திங்கள், 10 நவம்பர், 2025

தேனி மாவட்டத்தில் எரிவாயு தகன மேடை அமைப்புக்கு எதிர்ப்பு — 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லப்பட்டி கிராமத்தில் எரிவாயு தகன மேடை அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எல்லப்பட்டி கிராமம் அருகே உள்ள விவசாய நிலப் பகுதியில் நெல் வயலுக்கு அடுத்ததாக எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த தகன மேடையிலிருந்து வரும் புகை மற்றும் மாசு விவசாய நிலத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் எனக் கூறி, பொதுமக்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்திருந்தனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், பேரூராட்சி நிர்வாகம் பணிகளைத் தொடங்கியதை கண்டித்து, சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் “மின் மயானம் வேண்டாம்” எனக் கூறி பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்து மார்க்கையன்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மக்கள் தங்கள் கோரிக்கையை எழுத்து மனுவாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் அமைதியாக கலைந்தனர். இந்த நிகழ்வால் மார்க்கையன்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad