முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் துர்க்கா ஸ்டாலின் 2009ஆம் ஆண்டு தங்கள் உடலை தானம் செய்ய உறுதிமொழி அளித்த நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை 23,189 பேர் உடல் தானத்திற்குப் பதிவு செய்துள்ளனர் என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு முதல் இதுவரை மூளைச்சாவு அடைந்த 253 பேர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி உயிர்களை காப்பாற்றியுள்ளனர். இந்த சிறப்பால் தமிழ்நாடு, உலக அளவில் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் 2009ஆம் ஆண்டு சென்னையில் நடந்த விழாவில், “உடல் உறுப்பு தானம் என்பது தியாகத்தின் உன்னத வடிவம். கண்ணப்ப நாயனார் போல பலர் தங்கள் உடலை மனித குல நலனுக்காக அர்ப்பணித்துள்ளனர்,” என்று தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு முதல், உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் திருவுடலுக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் அலுவலர் மரியாதை செலுத்தும் நடைமுறை தொடங்கப்பட்டது. இதுவரை 253 பேருக்கு இந்த அரசு மரியாதை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்தின் பெருமையை நிலைநிறுத்தும் வகையில் “தியாகச் சுவர்” (Wall of Honour) நிறுவப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதுபோல் தியாகச் சுவர்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வெள்ளி, 7 நவம்பர், 2025
உடல் உறுப்பு தானத்தில் உலகிலேயே தமிழ்நாடு முதலிடம் — 23,189 பேர் பதிவு
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக