திருச்செந்தூர் முருகன் கோயிலில் இரவு நேரங்களில் பக்தர்கள் கடற்கரையில் தங்க அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர், முருகன் சூரபத்மனை வதம் செய்த புனித தலமாகும். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
சமீபகாலமாக, “பௌர்ணமி இரவில் கடற்கரையில் தங்கி நிலவொளியில் மறுநாள் நீராடி சாமி தரிசனம் செய்தால் பலன் அதிகம் கிடைக்கும்” என்ற வதந்தி பரவி, ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கி வந்தனர். இதனால் கடற்கரை பகுதி நெரிசலாகி, சுகாதார சீர்கேடு மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்ததாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து ஆலோசித்து, இனிமேல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கடற்கரையில் யாரும் தங்க அனுமதியில்லை என்று அறிவித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு (நவம்பர் 7) கடற்கரையில் தங்கியிருந்த பக்தர்களுக்கு கோயில் பணியாளர்கள் அறிவுரை வழங்கி அப்புறப்படுத்தினர்.
வெள்ளி, 7 நவம்பர், 2025
Home
ஆன்மிக தகவல்கள்
திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் இரவு தங்க அனுமதி ரத்து — கோயில் நிர்வாகம் புதிய உத்தரவு
திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் இரவு தங்க அனுமதி ரத்து — கோயில் நிர்வாகம் புதிய உத்தரவு
Tags
# ஆன்மிக தகவல்கள்
About bmstelevision
ஆன்மிக தகவல்கள்
லேபிள்கள்:
ஆன்மிக தகவல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக