ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி கருணை இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு, - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வெள்ளி, 4 ஜூலை, 2025

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி கருணை இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு,

ஈரோடு மாவட்டம், கே.கே.நகர், சென்னிமலை சாலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் என்.எல்.கருணை இல்லத்தில் 3.7.2025 அன்று ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். என்.எல்.கருணை இல்லத்தில் முதியோர்களுக்கான படுக்கை வசதி, தங்குமிடம், அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் வகைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, முதியோர்களின் உடல்நலம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், சமையலறையில் முதியோர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்ட உணவு மற்றும் உணவுப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், அவசர கால பயன்பாட்டிற்கான தீயணைப்புக் கருவி செயல்பாட்டில் உள்ளதா எனவும், முதியோர் இல்லம் நடத்துவதற்கான சான்றிதழ்கள் காலவரையறைக்குள் உள்ளதா என்பது குறித்தும், இல்லத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் இல்லத்தில் தங்கி உள்ள முதியோர்கள் விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, முதியோர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். முதியோர் இல்லத்தில் உள்ள கழிவறையில் கூடுதல் விளக்குகள் மற்றும் முதியோர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக கைப்பிடிகள் அமைக்குமாறும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, முதியோர்களுடன் அவர்களுக்கு தேவையான கூடுதல் வசதிகள், அவர்களது உடல் ஆரோக்கியம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார். இந்த ஆய்வுகளில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி சண்முகவடிவு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad