வைகாசி விசாகம் என்பது முருகப் பெருமானின் திருஅவதார தினமாகக் கருதப்படுகிறது. முருகப் பெருமான் அவதரித்த விசாகம் நட்சத்திரம் வைகாசி மாதத்தில் வரும் நாளில் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வைகாசி விசாக திருநாள் ஜூன் 09ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடக்கும். அதில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் சிறப்பானது. பழனியில் அனைத்து திருவிழாக்களும் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்பட்டாலும் அனைத்து விழாக்களுமே மலை அடிவாரத்தில் திருஆவினன்குடி தலத்தில் இருக்கு பெரிய நாயகி அம்மன் கோவிலில் இருந்தே துவங்கப்படும். இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 3-ஆம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இந்த நாளில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தன்று, லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது
சனி, 24 மே, 2025
பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா 2025 ஜூன் 03ல் கொடியேற்றம்
Tags
# ஆன்மிக தகவல்கள்
About bmstelevision
ஆன்மிக தகவல்கள்
லேபிள்கள்:
ஆன்மிக தகவல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக